சிபில் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும் அம்சங்கள்.. இந்த விஷயங்களில் உஷாராக இருங்கள்!
Issues Which Impact Cibil Score | ஒருவருக்கு கடன் வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை வங்கிகள் சிபில் ஸ்கோர் மூலமாக மட்டுமே தீர்மானம் செய்யும். இந்த நிலையில், பொதுமக்கள் செய்யும் சில விஷயங்கள் சிபில் ஸ்கோரை கடுமையாக பாதித்து கடன் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.
முன்பெல்லாம் கடன் வாங்க வேண்டும் என்றால் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. அப்படியும் இல்லை என்றால் வட்டிக்கு பணம் வாங்கி பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், இந்த பழக்கங்கள் எல்லாம் தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. காரணம், பொதுமக்களின் பண தேவைகளை வங்கிகள் ஈடுசெய்ய முன்வந்துள்ளது தான். வங்கிகள் பொதுமக்களுக்கு தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், தொழில் கடன் என அனைத்து தேவைகளுக்கும் கடன் வழங்குகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் யாரிடமும் கடன் கேட்காமல் தங்களது நிதி தேவைகளை வங்கிகள் மூலமே பூர்த்தி செய்துக்கொள்கின்றனர்.
வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் கட்டாயம்
இவ்வாறு வங்கிகள் வழங்கும் கடன் சேவைகளை பெற வேண்டும் என்றால் அதற்கான தகுதிகள் உள்ளன. அதில் முக்கியமானதுதான் சிபில் ஸ்கோர் (Cibil Score). ஒருவர் தான் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்துகிறாரா, அவரது கடன் வரலாறு எப்படி உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வங்கிகள் சிபில் ஸ்கோரை தான் முதன்மையாக எடுத்துக்கொள்கின்றன. இந்த நிலையில், பொதுமக்கள் செய்யும் சில தவறுகள் மூலம் அவர்களது சிபில் ஸ்கோர் சரிந்து வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் உருவாகிவிடும். எனவே அது குறித்து கவனமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
இதையும் படிங்க : 2 தலைமுறைக்கு நிதி பாதுகாப்பை உருவாக்கலாம்.. இந்த விஷயத்தை முறையாக செய்தால் போதும்!




சிபில் ஸ்கோரை பாதிக்கும் முக்கிய காரணிகள்
பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் காரணமாக அவர்களது சிபில் ஸ்கோர் மிக கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தவணைகள்
வங்கி கடனை மாத தவணை முறையில் திருப்பி செலுத்தும்போது ஏதேனும் ஒரு தவணையை தாமதமாக செலுத்தினாலோ அல்லது தவறவிட்டாலோ சிபில் ஸ்கோர் குறையும். எனவே மாத தவணையை முறையாக திருப்பி செலுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது.
அதிக கடன் பயன்பாட்டு விகிதம்
கிரெடிட் கார்டில் உங்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான வரம்பு உள்ளது என்றால் அதில் வெறும் 30 சதவீதம் அதாவது ரூ.30,000 வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முழு வரம்பையும் பயன்படுத்தினால் நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் நபர் என வங்கிகள் நினைத்துக்கொள்ளும்.
இதையும் படிங்க : முதல்வர் அறிவித்த 3 இலவச சிலிண்டர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.. என்ன விதிமுறைகள்?
ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பது
குறுகிய காலகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடனுக்கு முயற்சி செய்தால், அதுவும் உங்களது சிபில் ஸ்கோரை பாதிக்கும். நீங்கள் அதிக கடனுக்கு முயற்சி செய்வதை தெரிந்துக்கொண்டால் நீங்கள் கடன் பசியில் உள்ளவர்கள் என வங்கிகள் நினைத்துக்கொள்ளும்.