முதல்வர் அறிவித்த 3 இலவச சிலிண்டர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.. என்ன விதிமுறைகள்?
3 Free Gas Cylinders For Families In Tamil Nadu | தவெக ஆட்சி அமைத்தால் இலவசமாக 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24, 2026) 110 விதியின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் (Tamil Nadu Chief Minister Joseph Vijay) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், தமிழக பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, தவெக ஆட்சி அமைந்தால் 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை தான் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 2027 ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாகவும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். எனவே, 2027 ஆம் ஆண்டு முதல் தமிழக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்க உள்ளன.
இதையும் படிங்க : இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!




அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்காது – ஏன்?
இந்த இலவச கேஸ் சிலிண்டர்கள் அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்காது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் மூன்று இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்றால் அவர்களால் இந்த மூன்று இலவச சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச சிலிண்டர்கள் – இவர்களுக்கு முன்னுரிமை
இந்த இலவச சிலிண்டர் திட்டத்தில் சுமார் 1.3 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளன. இதன் காரணமாக, அரசுக்கு ரூ.4,000 கூடுதலாக செலவாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான், சிறு, குறு, வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!
மூன்று சிலிண்டர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டாமா?
மூன்று சிலிண்டர்கள் இலவசம் என்பதால், கட்டணம் செலுத்தாமல் மூன்று சிலிண்டர்களை வாங்கிக்கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். வழக்கம் போல கட்டணம் செலுத்தி சிலிண்டர்களை வாங்கும் பட்சத்தில், குடும்ப தலைவியின் வங்கி கணக்கிற்கு மூன்று சிலிண்டர்களுக்கான தொகை வரவு வைக்கப்படும். இப்படி தான் இந்த இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் செயல்படும்.
இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய தேவை இல்லை. காரணம், எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே குடும்பங்களின் தரவுகளை வைத்துள்ளன. எனவே, அரசு நேரடியாக என்ணெய் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெற்றுக்கொண்டு, அதில் இருந்து தகுதியான குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு கேஸ் சிலிண்டர்களுக்கான தொகையை வரவு வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.