AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்கள் முதலீடு செய்ய சிறந்த அஞ்சலக திட்டங்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Post Office Saving and Investment Schemes | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கு சிறந்த லாபத்தை கொடுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் முதலீடு செய்ய சிறந்த அஞ்சலக திட்டங்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Aug 2026 15:10 PM IST

மனிதர்களுக்கு எப்போதுமே பொருளாதார தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக அவர்கள் எப்போதும் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மாதம் மாதம் கை நிறைய சம்பாதித்தால் மட்டும் போதாது. அதனை சேமிப்பு அல்லது முதலீடு செய்து பல மடங்காக உயர்த்தும்போதுதான் நிதி பாதுகாப்பை பெற முடியும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக ஏராளமான திட்டங்களை அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்காக அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள்

அரசு அஞ்சலங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கென பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அதுல் பெண்களுக்கு ஏற்ற திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) என்பது பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமாகும். இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போது முதலீடு செய்து அவர்கள் பெரியவர்களானதும் நல்ல பலன்களை பெற முடியும்.

இதையும் படிங்க : இறந்தவரின் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி தர வேண்டுமா?.. விதிகள் கூறுவது என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி

பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கும் சிறந்த திட்டமாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) உள்ளது. இந்த திட்டத்திற்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், தேவை ஏற்படும் பட்சத்தில் பிபிஎஃப் திட்டத்திற்கு எதிராக கடன் பெறவும் முடியும். மேலும், அவசர நிதி தேவைகளின்போது பகுதி அளவு பணத்தை எடுத்துக்கொள்ளவும் இந்த திட்டத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி 7.1 சதவீதமாக உள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டரை LPG-ல் இருந்து PNG ஆக மாற்றினால் சலுகை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

மாதாந்திர வருமான திட்டம்

இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிடோருக்கு இந்த மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme) உதவியாக இருக்கும். அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் லாபத்தை மாதம் மாதம் ஊதியமாக பெரும் திட்டம் தான் இந்த மாதாந்திர வருமான திட்டம். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Follow Us