நகை பிரியர்களுக்கு ஷாக்.. ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold and Silver Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,710-க்கும், ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,047-க்கும், ஒரு சவரன் ரூ.1,28,376-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 21, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வாரம் முதல் சற்று உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிலவரப்படி தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்திருந்தது. அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,710-க்கும், ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,047-க்கும், ஒரு சவரன் ரூ.1,28,376-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டரை LPG-ல் இருந்து PNG ஆக மாற்றினால் சலுகை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,000 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை சீராக உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் மீண்டும் ரூ.15,000-ஐ நெருங்கியுள்ளது. இந்த விலை உயர்வு நகை வியாபாரிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர காரணம் என்ன? நிபுணர்களின் கூற்று:
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சீரற்ற நிலை, மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயரக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், தங்கத்தின் மீது முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: இறந்தவரின் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி தர வேண்டுமா?.. விதிகள் கூறுவது என்ன?
முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ள சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.