AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் – ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

SBI Cash Withdrawal Charges : ஸ்டேட் வங்கியின் அடிப்படை சேமிப்பு வைப்புத் தொகை கணக்குகள் வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பது தொடர்பான கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வருகிற அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் – ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2026 19:03 PM IST

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வங்கியான ஸ்டேட் வங்கி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற அக்டோபர் 1, 2026 முதல் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகை கணக்குகளுக்கான பணம் எடுக்கும் முறைகளில் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன் படி மாதம் 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பணப்பரிவர்த்தனைகக்கும் ஜிஎஸ்டியுடன் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்

அதன்படி ஸ்டேட் வங்கியின் அடிப்படை சேமிப்பு வைப்புத் தொகை கணக்குகள் வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பது தொடர்பான கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வருகிற அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிக்க : EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!

ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு

 

அடிப்படை சேமிப்பு வைப்புத் தொகை கணக்குகள் வைத்திருப்பவர்கள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 4 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 4 பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுத்தால், அதன்பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதுவரை கட்டணம் விதிக்கப்பட்டவில்லை. வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று பணம் எடுக்கவோ அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுக்கவும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கான பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி வருகிற அக்டோபர் 1, 2026 அன்று முதல் 4 முறை வரை பணம் எடுப்பதற்கு கட்டணம் விதிக்கப்படாது.

இதையும் படிக்க : வட்டியே இல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!

ஆனால் 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நேரம், வாடிக்கையாளர்கள் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமில்லாமல் இருக்கும் எனவும் டிஜிட்டல் பணப்பரிவரத்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1, 2026 முதல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் இதனை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இனி 4 முறைக்கு மேல் பணம் எடுப்பது கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இது அடிப்படை சேமிப்பு வைப்புத்தொகை கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us