AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் – எப்போ தெரியுமா?

Velankanni Festival Special Train : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு…  தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2026 20:42 PM IST

சென்னை, ஆகஸ்ட் 20 : வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னை தாம்பரம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவும் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

அந்த வகையில் இந்த ஆண்டு ஆலய திருவிழாவை, வரும் ஆகஸ்ட் 29, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்த திருவிழா, செப்டம்பர் 8, 2026 வரை 11 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

அந்த வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், வண்டி எண் 06037 என்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஆகஸ்ட் 24, 2026, ஆகஸ்ட் 31, 2026 மற்றும் செப்டம்பர் 7, 2026 ஆகிய 3 நாட்கள் இரவு 11.50 மணிக்கு கிளம்பும். இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 26, 2026, செப்டம்பர் 2, 2026, செப்டம்பர் 9, 2026 ஆகிய புதன்கிழமைகளில் நள்ளிரவு 12.45 மணிக்கு வண்டி எண் 06038 என்ற வாராந்திர சிறப்பு ரயில் அதே நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில் 21 அம்ரித் பாரத் ரயில் பெட்டிகளை கொண்டு இயங்கவுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu weather : தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வேளாங்கண்ணி ஆலய திருருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 300 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும்,

Follow Us