ஓசூர் வரை பெங்களூர் மெட்ரோ, நீட் தேர்வு ரத்து…. முதல்வர் விஜய்யின் 5 கோரிக்கைகள்
Southern Zonal Council Meet : மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று தமிழகத்தின் சார்பில் 5 முக்கிய கோரிக்கைகளை வெளியிட்டார்.
சென்னை, ஆகஸ்ட் 20 : மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று தமிழகத்தின் சார்பில் 5 முக்கிய கோரிக்கைகளை வெளியிட்டார். அதன் படி தொகுதி மறுவரையில் தென்மாநிலத்தின் பிரதிநித்துவம் குறையக்கூடாது என்பது முதல் பெங்களூரு மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் 5 கோரிக்கைகள்
- தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது.
- காவிரி விவகாரத்தில் கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
- நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- பெங்களூரு மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும்.
இதையும் படிக்க : தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?




அமித்ஷாவுடன் முதல்வர் விஜய்
#WATCH | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council
The Union Home Minister was felicitated by Tamil Nadu CM Vijay at the event.
The Southern Zonal Council comprises the states of Andhra Pradesh, Karnataka,… pic.twitter.com/ZbwL0VCh7N
— ANI (@ANI) August 20, 2026
இந்த நிகழ்வில் மேலும் பேசிய முதல்வர் விஜய், சட்டவிரோத ஆன்லைன் விற்பனை, அங்கீகரிக்கப்படாத விநியோகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் மூலம் இளைஞர்களுக்கு போதைப்பொருள் எளிதில் கிடைப்பது மிகுந்த கவலைக்குரியது. போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு மாநிலங்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
மேலும், உளவுத் தகவல்களை ஒருங்கிணைந்து பகிர்ந்து கொள்வது, கடுமையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றின் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை நனவாக்குவதோடு மட்டுமல்லாமல், ‘போதைப்பொருள் இல்லாத தென்னிந்தியா’ என்ற இலக்கை அடைய உதவும் என்றார்.
இதையும் படிக்க : “ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசி”.. அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கொந்தளித்த திமுக உறுப்பினர்கள்!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சிலின் 31வது மாநாடு சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆகஸ்ட் 20, 2026 இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு முதல்வர் விஜய் கௌரவித்தார். இந்த மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.