தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
Southern Zonal Council Meeting: சென்னையில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மேகதாது அணை திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தினார். அதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நீரைத் திறக்க வேண்டும் என உறுதியாக வலியுறுத்தப்பட்டது.
சென்னை, ஆகஸ்ட் 20: சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் கர்நாடகா சார்பில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் மேகதாது அணை திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து இரு முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலுவாக முன்வைத்தார்.
இதையும் படிக்க: “ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசி”.. அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கொந்தளித்த திமுக உறுப்பினர்கள்!!
மேகதாதுவில் அணை கட்டுவதால் பலன்:
#AmitShah | #SouthernZonalCouncil | #ZonalCouncil | #TamilNadu#Mahabalipuram | மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் நடைபெறும் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாடு…@AmitShah | @AmitShahOffice | @airnewsalerts pic.twitter.com/ONRiGyqtPq
— AIR News Chennai (@AIRNews_Chennai) August 20, 2026
கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரநீரைச் சேமித்து வைத்து, வறட்சி போன்ற நொடிக்கடியான காலங்களில் இரண்டு மாநிலங்களுக்கும் பயன்படுத்த முடியும் என வாதாடினார். இத்திட்டத்தால் தமிழ்நாட்டிற்கே அதிகப் பயன் கிடைக்கும் என்றும், நீர் பகிர்வு என்பதைத் தாண்டி மாநிலங்களுக்கு இடையே ‘நீர் ஒத்துழைப்பு’ அவசியம் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நதிநீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதால், நதிநீர் பங்கீடு தொடர்பான கெஜட் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பதிலடி கொடுத்த தமிழக அரசு:
கர்நாடகாவின் இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உரிய எதிர்ப்பும் பதிலடியும் கொடுக்கப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடகா வரைவுத் திட்ட அறிக்கையை மாற்றியமைத்துத் தாக்கல் செய்வதை மத்திய அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு வலியுறுத்தியது. மேலும், மழைக்காலத்தில் வெளியேற்றப்படும் உபரநீரைக் கணக்கில் காட்டாமல், தீர்ப்பாய உத்தரவுப்படி உரிய நேரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் அளவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு உறுதியாக எடுத்துரைத்தது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டிலேயே “மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி!”.. பேரவையில் வெடித்த சௌமியா அன்புமணி.. அமைச்சர் அளித்த உறுதி!!
தென்மாநில பொருளாதார பங்களிப்பு:
நதிநீர் பிரச்சனைகள் மட்டுமன்றி, தென்மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தென்மாநிலங்கள் 20% மட்டுமே இருந்தாலும், நாட்டின் மொத்த ஜிடிபியில் 33% பங்களிப்பை வழங்குகின்றன எனச் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், மத்திய அரசு வரிப் பகிர்வில் தென்மாநிலங்களுக்கு நியாயமான பங்கீட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம் மூலம் இரு மாநில நதிநீர் விவகாரங்களுக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது.