AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தென் மாநில முதலமைச்சர் மாநாடு.. காவிரி நீர் பங்கீடு குறித்து சுமூக முடிவு கிடைக்குமா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு–கர்நாடகா இடையேயான காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம், மேகதாது அணை திட்டம் உள்ளிட்ட நீர்வளப் பிரச்சினைகள் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

4 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தென் மாநில முதலமைச்சர் மாநாடு.. காவிரி நீர் பங்கீடு குறித்து சுமூக முடிவு கிடைக்குமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Aug 2026 13:05 PM IST

ஆகஸ்ட் 20, 2026: 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத்தலைவராக செயல்பட உள்ளார்.  மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அமித் ஷா ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்திலும் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.

மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்கள் என்ன?

தென்மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழக எம்.எல்.ஏ-க்களின் புதிய சம்பளம்… முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து எவ்வளவு உயர்வு.. முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,  உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் இதில் பங்கேற்கவில்லை.

காவிரி நீர் பங்கீடு – மேகதாது அணை விவகாரம் விவாதிக்கப்படுமா?

மாநாட்டில் தமிழ்நாடு–கர்நாடகா இடையேயான காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம், மேகதாது அணை திட்டம் உள்ளிட்ட நீர்வளப் பிரச்சினைகள் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க: முதல்முறையாக அமித் ஷாவைச் சந்தித்த முதல்வர் விஜய்.. கோவலத்தில் நடந்த சந்திப்பு.. பின்னணி என்ன?

இதுதவிர, மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளப் பகிர்வு, பொருளாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, மாநில எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மகாபலிபுரத்தில் சுற்றுலா தளங்கள் மூடல்:

மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவதால், அரசியல் வட்டாரத்தில் இந்த மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us