AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக எம்.எல்.ஏ-க்களின் புதிய சம்பளம்… முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து எவ்வளவு உயர்வு.. முழு விவரம் உள்ளே!

Tamil Nadu MLAs Monthly Salary : தமிழக எம்எல்ஏக்கள் மாதம் தோறும் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர். தற்போது, வாகன படி மற்றும் உதவியாளர் படி உயர்த்தப்பட்ட நிலையில், எம்எல்ஏக்களின் தற்போதை சம்பளம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

தமிழக எம்.எல்.ஏ-க்களின் புதிய சம்பளம்… முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து எவ்வளவு உயர்வு.. முழு விவரம் உள்ளே!
தமிழக எம்எல்ஏக்கள் சம்பளம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Aug 2026 22:15 PM IST

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் தோறும் ரூ.1.05 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த வாகன படி மற்றும் உதவியாளர் படியை தொடர்ந்து, எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.1.80 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழக எம்எல்ஏக்கள் வரும் காலங்களில் பெறக்கூடிய சம்பளம் மற்றும் படிகள் எவ்வளவு என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இதில்,

மேலும் படிக்க: மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!

  • அடிப்படை ஊதியம்- ரூ.30 ஆயிரம்.
  • மாதாந்திர படி ரூ.10 ஆயிரம்.
  • சட்டமன்ற தொகுதி படி- ரூ.25 ஆயிரம்.
  • அஞ்சல் படி- ரூ. 2,500.
  • தொலைபேசி படி- ரூ. 7,500,
  • தொகுப்புப்படி- ரூ. 5,000.
  • வாகனப் படி ரூ. 25 ஆயிரம் + 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 75 ஆயிரம்
  • உதவியாளர் படி ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ. 1.80 லட்சமாக உயர்வு

தற்போது, சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் எனவும், அந்த காருக்கான படியாக ரூ. 50 ஆயிரமும், உதவியாளர் வைத்துக் கொள்ளலாம் எனவும், அவர்களது படியாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில், எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில், அடிப்படை ஊதியம், மாதாந்திர படி ரூ. 10 ஆயிரம், சட்டமன்ற தொகுதி படி உள்ளிட்டவை உயர்த்தப்படவில்லை. ஆனால், எம்எல்ஏக்களின் வாகன படி முன்பு இருந்ததை விட ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

உதவியாளர் படி புதிதாக அறிவிப்பு

இதே போல, புதிதாக உதவியாளர் படி ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதால் மொத்தத்தில் ரூ. 75 ஆயிரம் கூடுதலாக எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஒரு எம்எல்ஏவின் மாதாந்திர சம்பளம் மற்றும் படி என மொத்தம் ரூ. 1.80 லட்சம் ஆகும். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, ஜோதிமணி எம்எல்ஏ எழுந்து நான் வெகு தொலைவில் இருந்து சட்டமன்றத்துக்கு வந்து செல்வதாகவும், தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பதால் மக்கள் குறைகளை கேட்டறிய முடியவில்லை.

எம்எல்ஏவின் கோரிக்கையின்படி கார்- உதவியாளர்

இதனால், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் இடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையின் அடிப்படையில், தமிழக முதல்வர் விஜய் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் எனவும், உதவியாளர் வைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Follow Us