மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
E- commerce Platform For women Self Help Groups : தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருள்களை சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்துவதற்காக மின்னணு வணிக தளம் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான விவாதம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில், மேற்கண்ட துறைகள் சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பிரத்தியேகமான மின்னணு வணிக தளம் அமைக்கப்படும். நிகழாண்டில் சிறப்பாக செயல்படும் ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வெற்றி பெண்கள் சுய உதவி குழு விருது வழங்கப்படும். திருநர்களின் நலனுக்காக ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஊரக பகுதிகளில் உள்ள 6,800 சுய உதவி குழுக்களுக்கு ரூ.102 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
13 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 கோடி சுழல் நிதி
மேலும், ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 13,333 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 20 கோடி வழங்கப்படும். அத்துடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2 கொடி மதிப்பீட்டின் மூலப்பொருள்கள் ஆதரவு வங்கி அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகள் மற்றும் ஆயிரம் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் காத்தல், மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதற்காக ரூ. 60 லட்சம் கேடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு… அமித் ஷா தலைமையிலான குழுவில் சிஎம் விஜய்க்கு முக்கிய பொறுப்பு.. என்ன அது!




தமிழகம் முழுவதும் 100 வேலை வாய்ப்பு முகாம்கள்
மேலும், சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழக முழுவதும் மாவட்ட அளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதே போல, கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் வயிற்றுநர்கள் பணியிடங்களை மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் இறப்பின் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை அரசு அருங்காட்சியகம் டிஜிட்டல் மையம்
சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மையமாகப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!