AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்லை மக்களே நோட் பண்ணுங்க.. இந்த பகுதிகளில் நாளை மின் தடை.. முழு விவரம் இதோ!

Tirunelveli Power Cut Announced : திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம்.

நெல்லை மக்களே நோட் பண்ணுங்க.. இந்த பகுதிகளில் நாளை மின் தடை.. முழு விவரம் இதோ!
மின்தடை அறிவிப்பு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Oct 2026 11:00 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களில் நாளை வியாழக்கிழமை ( அக்டோபர் 8- ஆம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில்: பழைய பேட்டை மற்றும் பொருள்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நெல்லை டவுன், மேல ரத வீதி மேல் பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், காந்திநகர், பழைய பேட்டை, வாகைகுளம், திருப்பணி கரிசல் குளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

பேட்டை முதல்  நயினார் குளம் வரை

இதேபோல, பேட்டை, குன்னத்தூர், கோடீஸ்வரன் நகர், தொழிற்பேட்டை, தீன் நகர், சாஸ்திரி நகர், பாட்டபத்து, திருமங்கை நகர், அபிஷேக பட்டி, செந்தமிழ் நகர், திருநெல்வேலி டவுன், பொருட்காட்சி திடல், பூம்புகார், எஸ். என். ஹை ரோடு, சி. என். கிராமம், ஸ்ரீபுரம், சுந்தரர் தெரு, சிவந்தி ரோடு, கருப்பன் துறை, போஸ் மார்க்கெட், குறுக்குத்துறை, சாமி சன்னதி தெரு, ஏ. பி. மாடத்தெரு, அம்மன் சன்னதி தெரு, கள்ளத்தி முடுக்கு, மேல மாட வீதி, நயினார் குளம் சாலை, போத்தீஸ் நயினார் குளம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!

வள்ளியூர் கோட்டத்தில் நாளை மின் தடை

இதே போல, மேல மாட வீதி, சத்தியமூர்த்தி தெரு, மார்க்கெட், வையாபுரி நகர், வ. உ. சி. தெரு, பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், தெற்கு தெரு, சிவன் கோவில், ராம் நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்: நாங்குநேரி ( ஏ.எம்.ஆர்.எல்) துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. இதில்,

நாங்குனேரி முதல் கோவனேரி வரை மின் நிறுத்தம்

  • நாங்குநேரி.
  • சிறுமளஞ்சி.
  • பெருமளஞ்சி கீழ் ஊர்.
  • பெருமளஞ்சி.
  • இராஜாக்கள்மங்களம்.
  • பெருமளஞ்சி மேல் ஊர்.
  • வாகைகுளம்.
  • ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம்.
  • கோவனேரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “எங்களை தொந்தரவு பண்ணான்.. அதான் போட்டோம்” மயிலாப்பூர் ஏசி மெக்கானிக் கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!

Follow Us