எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் கார் கொடுத்தது எதுக்கு தெரியுமா? உண்மையை உடைத்த பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Commented CM Vijay Announce Cars : தமிழகத்தில் 234 எம்எல்ஏக்களுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கார் அறிவித்தது எதற்காக என்பது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அரசு சார்பில் இலவச கார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். இது தொடர்பாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முதல் முறை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை எந்த முதல்வரும் செய்யாததாகும். இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவதை விடுத்து கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு வழங்கலாம். இதற்காக அரசுக்கு ரூ. 150 கோடிக்கு மேல் செலவாகும். எனது மதில் இருக்கு கருத்தை கூறினேன்.
விவசாய முழு கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கியிருக்கலாம்
தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. தற்போது, உள்ள எம்எல்ஏக்களுக்கு 90 சதவீத அளவில் வாகனங்கள் உள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களில் ஒரு சிலருக்கு வாகனங்கள் இல்லை. இதற்காக செலவாகும் ரூ. 150 கோடியை விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதிக அளவிலான மக்கள் தேவை இருக்கும் பட்சத்தில், அதில் கவனம் செலுத்த வேண்டும். ரேஷன் கார்டு காரர்கள் இருக்கும் இடத்தில் புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!




ரேஷன் பொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும்
அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். இதில், கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு மற்றும் நவதானிய பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும். பயோமெட்ரிக் மெஷின்கள் முறையாக வேலை செய்ய வேண்டும். நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதனை உரிய கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு உரிய நேரத்தில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்களில் தற்போதும் கூட எடை பிரச்சினை இருந்து வருகிறது.
முதல்வர் விஜய் கார் வழங்கியதுக்கு இதுதான் காரணம்
பால் கொள்முதல் விலையில் ரூ. 3 உயர்த்தி உள்ளனர். இந்த தொகையை மேலும் உயர்த்தி இருக்கலாம். ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம். இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யாததை முதல்வர் விஜய் செய்துள்ளார். அதனை தேமுதிக வரவேற்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் ஒரு கார் பிரியர். தவெகவில் அனைவரும் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதனை நிறைவேற்றி உள்ளார். திருநெல்வேலியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாருக்கு மரண தண்டனை அளித்ததை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!