விவசாயிகள் கவனத்துக்கு… தனித்துவ அடையாள எண் கண்டிப்பாக பெற வேண்டும்.. கீழப்பாவூர் வேளாண் அதிகாரி சேதுராமன் அறிவுறுத்தல்!
Farmers Unique Identification Number : தென்காசியில் விவசாயிகள் தங்களுக்கான தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அந்த எண் பெறுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து கீழப்பாவூர் வட்டார் வேளாண் உதவி இயக்குநர் சேதுராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் துறை மூலமாக தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்களின் மூலமாக வரும் காலங்களில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் ஆகியவை விவசாயிகளின் தரவுகள் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன் அடைய முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தனித்துவமான அடையாள எண்களை பெற வேண்டும் என்று வேளாண்துறையால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுக்கான தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு திட்ட பயன்களை பெற அடையாள எண் அவசியம்
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நில உடமை வாரியாக மின்னணு பயிர் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களையும், அதன் பலன்களையும் பெறுவதற்கு இந்த தனித்துவமான அடையாள எண் தேவைப்படும். இந்த எண்ணை பெற்றுள்ள விவசாயிகள் அரசு திட்டங்களின் பயன்களை பெறும் போது ஒவ்வொரு முறையும் நிலம் மற்றும் சுயவிவரம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!




தனித்துவ அடையாள எண்ணால் கிடைக்கு பயன்கள்
மேலும், விவசாய அடையாள எண் பெற்ற விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டம் மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அல்லது இதர வங்கிகள் மூலமாக பெறப்படும் பயிர் கடன், பயிர் காப்பீடு, நிவாரண நிதி, பயிர்களுக்கு தேவையான உரம் வாங்குவது, மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் முழுவதுமாக பயன்பெற முடியும். எனவே, கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை விவரங்களை அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
தனித்துவ அடையாள எண்ணை பெறுவது எப்படி
இதற்காக அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேராக சென்று தங்களது நில உடமை விவரங்கள், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்யலாம். இல்லையெனில், தங்களது கிராமங்களில் உள்ள உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நேரில் தொடர்பு கொண்டு தனித்துவமான அடையாள எண்ணை பெற்று பயன் பெறலாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாய பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம்!