எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!
தமிழக எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் இலவச கார் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து எந்த வகையான கார் வழங்கலாம் என்பதை தேர்வு செய்வதற்காக பிரபல தனியார் கார் நிறுவனத்தை சேர்ந்த 5 வகையான கார்கள் தலைமை செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டன .
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் இலவச கார்கள் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேற்று ( புதன்கிழமை) அறிவித்தார். அதற்கு மறுநாளான இன்றே எம்எல்ஏக்களுக்கு எந்த வகையான காரை வழங்கலாம் என்பதை தேர்வு செய்வதற்காக தலைமைச் செயலக வளாகத்தில் பிரபல தனியார் கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின்
- ஸ்கார்பியோ கிளாசிக்.
- மஹிந்திரா ஸ்கார்பியோ.
- மஹிந்திரா எக்ஸ்.யூ.வி. 7 எக்ஸ். ஓ.
- மஹிந்திரா பொலிரோ.
- மஹிந்திரா பொலிரோ நியோ.
கார்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட முதல்வர் விஜய்
ஆகிய 5 மாடல் கார்கள் கொண்டு வரப்பட்டன. இதில், எந்த வகையான காரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதில், அனைத்து கார்களையும் அதிகாரிகள் ஓட்டிப் பார்த்து டெஸ்ட் ட்ரைவ் செய்தனர். தொடர்ந்து, எந்த கார் பொறுத்தமாக உள்ளதோ அந்த கார் தேர்வு செய்யப்பட்டு அதனை அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் எம்எல்ஏக்களுக்கான கார்கள் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டு அது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!




எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவதன் பின்னணி
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி எழுந்து நான் வெகு தொலைவில் இருந்து சட்டப்பேரவைக்கு ரயிலில் வந்து செல்வதாகவும், எனது தொகுதி சுமார் 40 கிலோமீட்டர் சுற்றளவில் இருப்பதால், அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிவதில் பெரிய இடர்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனை கலைவதற்காக அரசு சார்பில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் அறிவித்த முதல்வர்
அதன் அடிப்படையில், முதல் முறை எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார் வழங்கப்படுவதாகவும், அதற்காக மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.75 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன், உதவியாளர் வைத்து கொள்ளவும், அதற்காக மாதம் தோறும் ரூ. 25 ஆயிரம் படி வழங்குவதாகவும் அறிவிப்பில் குறிப்பிட்டார். இதற்கு மறுநாளான இன்றே கார்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!