இந்த தென் மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து மற்றும் பாதை மாற்றம் – முழு விவரங்கள்
:தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் பாதை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 11 : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் பாதை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் உள்கட்டமைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய வழித்தடங்களில் முக்கிய ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம் செப்டம்பர் மாதம் வரை என தொடரும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. தரிசன நேரத்தில் மீண்டும் மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க!




முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து சில ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன் படி, திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56751/56754) ஆகஸ்ட் 12 மற்றும் 13, 2026 ஆகிய 2 நாட்களுக்கு முழுமையாக இயங்காது.
- திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56003/56004) ஆகஸ்ட் 13, 2026 முதல் ஆகஸ்ட் 25, 2026 வரையிலான 13 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதி நேர மாற்றங்கள் செய்யப்பட்ட ரயில்கள்
தண்டவாளங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் பகுதி நேரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- அதன் படி திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16732/16731) ஆகஸ்ட் 12, 2026 மற்றும் ஆகஸ்ட் 13, 2026 ஆகிய 2 நாட்களுக்கு திருநெல்வேலி வரை மட்டுமே செல்லும். திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56711/56714) ஆகஸ்ட் 11, 2026 முதல் ஆகஸ்ட் 28, 2026 வரை மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன நாட்களில் இந்த ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையை இயங்காது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்
சில ரயில்கள் தண்டவாள சீரமைப்பு காரணமாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
- அதன் படி நாகர்கோவில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (16352) என்ற ரயில் ஆகஸ்ட் 9, 2026 முதல் ஆகஸ்ட் 27, 2026 வரை திண்டுக்கல் பாதையில் செல்லாமல் மதுரை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதே போல நாகர்கோவில் – கோவை எக்ஸ் பிரஸ் (16321) ஆகஸ்ட் 17, 2026 முதல் செப்டம்பர் 1, 2026 வரை விருதுநகரில் இருந்து நேரடியாக காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்சொன்ன நாட்கலில் இந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களுக்கு வராது.