AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லஞ்ச புகாரில் கட்சியிலிருந்து நீக்கம்.. செங்கல்பட்டில் கணவரின் பதவி மனைவிக்கு அளிப்பு.. தவெகவில் வெடித்த சர்ச்சை!

Chengalpattu East District Secretary Post : லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா என்ற வீராசாமியின் மனைவிக்கு அதே பதவியை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார் .

லஞ்ச புகாரில் கட்சியிலிருந்து நீக்கம்.. செங்கல்பட்டில் கணவரின் பதவி மனைவிக்கு அளிப்பு.. தவெகவில் வெடித்த சர்ச்சை!
கட்சி பதவி பறிக்கப்பட்ட வீராசாமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Aug 2026 21:00 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமாக இருந்து வந்தவர் வீரா என்ற வீராசாமி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ. ஒரு லட்சம் கூகுள் பே மூலமும், ரூ.30 ஆயிரத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரிலும் பெற்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பதவியில் இருந்து தமிழக வெற்றி கழக கட்சியின் தலைமை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில், வீரா என்ற வீராசாமி இடமிருந்து பறிக்கப்பட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பதவியை அவரது மனைவி ஹேமாவதிக்கு வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர்

இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு வீ. ஹேமாவதிக்கு வழங்கப்படுகிறது. இன்று முதல், அவர் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

லஞ்சம் பெற்ற இணை செயலர் கைது – பதவி பறிப்பு

தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் வீரா என்ற வீராசாமி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், அவரை கட்சியின் தலைமை நீக்கி இருந்தது. இந்த நிலையில், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த கட்சி பதவியை அவரது மனைவிக்கு கட்சி தலைமை வழங்கி இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. வீராசாமி லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், அவர் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தார்.

லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஊராட்சி தலைவர் விளக்கம்

அதில், ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்ததாரர் தன்னிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்றிருந்ததார். அந்த கடனை தன்னிடம் கூகுள் பே மூலமாகவும், நேரிலும் கொடுத்தார். இதில், எந்த விதமான லஞ்சமும் வாங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட விளக்கங்களை தெரிவித்து இருந்தார். இருந்தாலும், அவரை கட்சி பதவியில் இருந்து முதல்வர் விஜய் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கடலூர்- புதுச்சேரி எல்லையில் ரத்தக்களம்.. நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்!

Follow Us