AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருநெல்வேலி- தென்காசி மக்களே நோட் பண்ணுங்க.. இரு நாள்கள் மின் தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

Tirunelveli And Tenkasi Power Outage : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரு நாள்கள் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அவை என்னென்ன இடங்கள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி- தென்காசி மக்களே நோட் பண்ணுங்க.. இரு நாள்கள் மின் தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Oct 2026 20:44 PM IST

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் கோட்டங்களில் இரு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறப்பில் கூறியிருப்பதாவது:

சங்கரன்கோவில் கோட்டம்:-

சங்கரன்கோவில் பெருமாள் பட்டி துணைமின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 2- ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான சங்கரன்கோவில் நகர் பகுதி, களப்பா குளம், என். ஜி. ஓ. காலனி, வாடிக்கோட்டை, புளியம்பட்டி, பெரும்பத்தூர், பெரியூர், மணலூர், முள்ளிக்குளம், வடக்கு புதூர், ராமலிங்கபுரம், பெருமாள்பட்டி, மாங்குடி, அழகாபுரி, இனாம்கோவில்பட்டி, செந்தட்டியாபுரம், தென்மலை, அருகன்குளம்புதூர், இடையான்குளம், எட்டிச்சேரி, முறம்பு, கூனங்குளம், வேலாயுதபுரம், பந்தபுளி, ஆசிலாபுரம், பருவக்குடி, வெங்காநல்லூர், அ. சுப்பிரமணியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!

கடையநல்லூர் கோட்டம்:-

இதே போல, கடையநல்லூரி கோட்ட செயற் பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை மறுநாள் சனிக்கிழமை ( அக்டோபர் 3- ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ் வரும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, புளியங்குடி, அய்யாபுரம், சிந்தாமணி, சிங்கிலிபட்டி, சிதம்பரபேரி, ராஜகோபாலபேரி, சுந்தரேசபுரம், சங்கனாப்பேரி, காடுவெட்டி, இந்திரா நகர், புன்னையாபுரம், சொக்கம்பட்டி, திருவேட்டநல்லூர், மேலபுளியங்குடி, திரிகூடபுரம், தலைவன் கோட்டை, மலையடிகுறிச்சி, வீரசிகாமணி, அரியநாயகிபுரம், அருணாச்சலபுரம், பட்டாடைகட்டி, வட நத்தம் பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி, திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்:-

இதே போல, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை மறுநாள் ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊத்துமலை, குறிஞ்சான் குளம், சோலைசேரி, அமுத புரம், மேல மருதப்பபுரம், கருவந்தா, கங்கணாங் கிணறு, மாவிலியூத்து, கள்ளத்திகுளம், ஆலங்குளம், ருக்குமணியம்மாள்புரம், ஐந்தாம் கட்டளை, ஆண்டிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், குறிப்பின் குளம், குத்த பாஞ்சான், அத்தி யூத்து, குருவன் கோட்டை, கல்லூத்து, கழுநீர் குளம், பூலாங்குளம், அடைக்கலப்பட்டினம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!

Follow Us