AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

Anti Narcotics Task Forces : தமிழகத்தில் போதை பொருட்களை தடுப்பதற்காக சென்னை உள்பட 12 மாவட்டங்களில் 65 சிறப்பு அதிரடிப் படைகளை உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ரூ. 264.14 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
போதைப்பொருள் தடுப்பு படை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Aug 2026 17:05 PM IST

தமிழகத்தில் போதை பொருட்களை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், சென்னை, கோவை, ஆவடி, தாம்பரம், சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஆகிய 12 மாவட்டங்களில் 65 போதை பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை களம் இறங்க உள்ளனர். இதில், ஒரு குழுவில் ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் நான்கு உதவி ஆய்வாளர் கல் இருவது காவலர்கள் இடம் பெறுவர். மொத்தமாக, 65 காவல் ஆய்வாளர்கள், 260 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 1300 காவலர்கள் இந்த படையில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ரூ.26.14 கோடி நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் முழு வீச்சில் செயல்படும்

இந்தப் படையானது போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு முழு வீச்சில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு படைகள் மற்றும் அவர்களுக்கான காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: ஓடும் கன்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து 10 லேப்டாப்கள் திருட்டு.. கள்ளக்குரிச்சியில் பகீர் திருட்டு சம்பவம்!

முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும்

அதன்படி, தற்போது 65 போதை தடுப்பு சிறப்பு அதிரடி படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த படைகளானது முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும் எனவும், செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களால் நடைபெறும் குற்றங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டத்துக்கு ஒரு காவல் நிலையம் என 37 காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

Cd3945f2 0804 4eaa Ab0c 8cc942e0245d Ezremove

போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை

போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞர்களை மீட்க

ஏற்கனவே தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அத்துடன் இளைஞர்களை போதைப் பொருட்கள்கள் பயன்பாட்டில் இருந்து காப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது 65 போதை பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படைகள் அமைப்பதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர்!”.. சட்டப்பேரவையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய்.. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தீர்மானம் நிறைவேற்றம்!!

Follow Us