AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்னப்பா கஷ்டமா இருக்கா? அவினாஷ் – ஜேசனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கிய லக்ஷ்மி பிரியா – புரோமோ!

Lakshmi Priyas Bigg Boss Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. லீடர் எக்ஸிட் மூலமாக சமீபத்தில் லக்ஷ்மி பிரியா வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் மேடைக்கு வந்துள்ளார். அவர் அந்த மேடையில் அவினாஷ் மற்றும் ஜேசனை வார்த்தைகளால் சரமாரியாக பேசிய புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

என்னப்பா கஷ்டமா இருக்கா? அவினாஷ் – ஜேசனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கிய லக்ஷ்மி பிரியா – புரோமோ!
பிக் பாஸ் ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2026 15:02 PM IST

தமிழில் மக்களிடையே பிரபலமாக இருந்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மொத்தமாக 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வேனும் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்திலும் 2 எவிக்ஷன் நடைபெற்றிருந்தது. அதில் ஆனந்தி (Anandhi), அவரின் தந்தை இறந்த காரணத்தினால் அவசரமாக வெளியேற்றப்பட்டிருந்தார். அந்த விதத்தில் மேலும் ஒரு எவிக்ஷன் இந்த வாரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் லீடர் எக்ஸிட் மூலமாக லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya) வெளியேற்றப்பட்டிருந்தார். அந்த விதத்தில் அவர் இன்று (27/09/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய லக்ஷ்மி பிரியா, வீட்டின் முன்னாள் தலைவர் அவினாஷ் மற்றும் ஜேசன் இருவரையும் தனது வார்த்தைகளால் வெச்சி செய்துள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பிக் பாஸில் வந்த திருப்பம் – வைரலாகும் புரோமோ!

அவினாஷ் மற்றும் ஜேசன் இருவரையும் லக்ஷ்மி பிரியா சரமாரியாக கேட்ட கேள்வி குறித்த புரோமோ:

அந்த புரோமோவில், விஜய் சேதுபதியுடன் மேடையில் இருந்த லக்ஷ்மி பிரியா, அதில் “எனக்கு இந்த வீட்டில் மிகவும் பிடிக்காத நபர் அவினாஷ், என்னப்பா கஷ்டமாக இருக்கா?.. கேவலமான அரசியலுக்காக தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னால வீட்டின் தலைவர். மேலும் ஜேசன், சார் அந்த எக்ஸ் லிட்டருக்கு பிரைன் இவர்தான் சார். மேலும் இன்னொருத்தருக்காக யூஸ் பண்ணி” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: காதல் என்று வரும்போது, ​​பொருத்தத்தை விட ஈர்ப்பு மேலோங்குமா? இணையத்தில் வைரலாகும் #லவ் பட ட்ரெய்லர்!

உடனே வீட்டின் உள்ளே இருந்த ஜேசன், தனது தலையில் கையை வைத்தமாரியாக செய்கையை செய்திருந்தார். உடனே ஆத்திரப்பட்டு லக்ஷ்மி பிரியா, இவரால் இதுமட்டும்தான் பண்ணமுடியும் என கூறியிருந்தார். தற்போது இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் லக்ஷ்மி பிரியாவின் செயலை பலரும் பாராட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லக்ஷ்மி பிரியா ரீஎன்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறிவருகிறார்கள்.

Follow Us