ஓடும் கன்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து 10 லேப்டாப்கள் திருட்டு.. கள்ளக்குரிச்சியில் பகீர் திருட்டு சம்பவம்!
Laptops Stolen From Running Lorry | கள்ளக்குரிச்சியில் ஓடும் கன்டெய்னர் லாரியில் இருந்து 10 லேப்டாப்கள் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குரிச்சி, ஆகஸ்ட் 10 : கள்ளக்குரிச்சியில் (Kallakurichi) ஒடும் கன்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து 10 லேப்டாப்கள் (Laptops) திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஓடும் லாரியில் இருந்து லேப்டாப்கள் திருடப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி
சென்னையில் இருந்து தனியார் கொரியர் நிறுவனம் மூலம் ஒரு கன்டெய்னர் லாரியில் செல்போன்கள், லேப்டாப்கள், டிவிக்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த கோட்டை பெருமாள் என்ற 26 வயது நபர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்




ஓடும் லாரியில் பூட்டை உடைத்து திருட்டு
லாரி கள்ளக்குரிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தபோது, லாரியில் கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக லாரி ஓட்டுநரை அழைத்துள்ளார். அதன் அடிப்படையில் லாரியை நிறுத்திவிட்டு சோதனை செய்த ஓட்டுநர், லாரியின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து – சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் விஜய்
மீண்டும் உடைக்கப்பட்ட பூட்டு
பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், லாரி ஓட்டுநர் தன்னிடம் இருந்த மற்றொரு பூட்டை எடுத்து லாரியை பூட்டியுள்ளார். பின்னர் அவர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது அந்த மற்றொரு பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கன்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதில் இருந்த 10 லேப்டாப்களை திருடியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.