நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையில் ஆகஸ்ட் 9, 2026 இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சென்னை, ஆகஸ்ட் 9 : சென்னையில் ஆகஸ்ட் 9, 2026 இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 9, 2026 இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அந்த அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : நாட்டையே அதிரவைத்த ‘மணி மியூல்’ சைபர் மோசடி.. தமிழகம் முழுவதும் 800 பேர் கைது!!




நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10, 2026 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெயில் தாக்கம் காரணங்களால், ஆகஸ்ட் 10, 2026 நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்குமா திமுக?.. பாஜகவிற்கு மறைமுக ஆதரவா?.. அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!!
சென்னை மழை நிலவரம்
இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 9, 2026 இன்றும் மற்றும் நாளை ஆகஸ்ட் 10, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.