AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் தொடரும் மழை… சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் தொடரும் மழை… சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 8, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வரும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, வட தமிழக கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 ஆம் தேதி வரை தொடரும் மழை:

அதன்படி, ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரும் நாட்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us