AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு! – முன்பதிவு எப்போது?

Kanda Sashti Special Trains Announced : திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைில் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு! – முன்பதிவு எப்போது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 19:46 PM IST

சென்னை, நவம்பர் 13 : கந்த சஷ்டியின் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு திருச்செந்தூரில் வருகிற நவம்பர் 15, 2026 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை (Special Train) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவுக்கு அதிகளவு மக்கள் பயணிப்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்கும் பொறுட்டு சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தாம்பரம் இடையே 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 14, 2026 அன்று மாலை 4.10 மணிக்குப் புறப்படும் 06007 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரைச் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது.

இதையும் படிக்க : கிருஷ்ணகிரியில் பரபரப்பு.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மறுமார்க்கத்தில், திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 15,2026 அன்று இரவு 10.30 மணிக்குப் புறப்படும் 06008 என்ற சிறப்பு ரயில், மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 15, 2026 அன்றுஇரவு 11 மணிக்குப் புறப்படும் 06010 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.55 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நவம்பர் 16, 2026 அன்று நண்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் 06009 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், அதே நாள் இரவு 11.40 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இந்த இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிக்க : மதுரை நகைக்கடையில் கொள்ளை… திணறும் போலீஸ் – ஏஐ-யை நாட முடிவு

முன்பதிவு எப்போது?

இந்த சிறப்பு ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு, மூன்றடுக்கு பொருளாதார வகுப்பு, படுக்கை வசதி மற்றும் பொதுப்பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 13, 2026 அன்று மாலை 6 மணிக்கும், மற்ற மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 14, 2026 அன்றுகாலை 8 மணிக்கும் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Follow Us