AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அம்மா என்னோடு பேசமாட்டுக்காங்க.. நாமக்கல் காவல் நிலையத்தில் 8 வயது மகன் அளித்த சுவாரஸ்ய புகார்.. உருக வைக்கும் பின்னணி!

Rasipuram Police Station Boy Complaint : நாமக்கல் மாவட்டத்தில் தாய் பேச மறுத்ததால் அவரது 8 வயது மகன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. அதில், தனது தாயை தன்னுடன் பேசுமாறு கூறுங்கள் என்று தெரிவித்துள்ளான்.

அம்மா என்னோடு பேசமாட்டுக்காங்க.. நாமக்கல் காவல் நிலையத்தில் 8 வயது மகன் அளித்த சுவாரஸ்ய புகார்.. உருக வைக்கும் பின்னணி!
நாமக்கல் சிறுவன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Sep 2026 19:06 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியின் மகன் 8 வயது மகன். இவர், வீட்டில் அதிகமாக சேட்டை செய்வதுடன், வீட்டில் இருந்த சோபாவை கிழித்துள்ளான். இதனை அவரது தாய் கண்டித்துடன், மீண்டும் சேட்டை செய்தால் போலீசில் பிடித்து கொடுப்பதாக எச்சரித்துள்ளார். அப்போது, பயந்து போன அந்த சிறுவன் தான் செய்த தவறை வருந்தி தாயிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளான். தொடர்ந்து, சிறுவன் மாலையில் வழக்கம் போல டியூசன் புறப்பட்டு சென்றுள்ளான். டியூஷன் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அந்த சிறுவன் வழக்கம் போல தனது தாயிடம் சகஜமாக பேச முயற்சித்தான். ஆனால், அவரது தாய் பேச மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அந்த சிறுவன் அம்மாவை தன்னிடம் பேச வைக்க முடிவு செய்தான்.

ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த சிறுவன்

இதற்காக வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரம் காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று, அங்கு இருந்த காவலர்களிடம் அழுது கொண்டே எனது பேச்சை கேட்கவில்லை என்றால் போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என்று அம்மா கூறினார்கள். ஆனால், தற்போது எனது அம்மா என்னிடம் பேச மறுக்கிறார்கள். எனவே, நீங்கள் எனது வீட்டுக்கு வந்து எனது தாயிடம் கூறி என்னுடன் பேச வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளான். மேலும், தனது தந்தை கத்தியை காட்டி மிரட்டுவதாகவும் போலீசாரிடம் சிறுவன் தெரிவித்துள்ளான்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!

காவல் நிலையத்தில் மகனை கண்டுபிடித்த பெற்றோர்

இந்த விவகாரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். ஆனால், சிறுவன் கிடைக்காததால் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அங்கு இருந்த தனது மகனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன், தனது மகன் காவல் நிலையத்துக்கு வந்தது குறித்து பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது, காவலர்கள் சிறுவனிடம் பேசி தாய், தந்தை அறிவுரைகளை கேட்க வேண்டுமென்று அறிவுறுத்தினர்.

பெற்றோர்- சிறுவனுக்கு போலீசார் அறிவுரை

இதேபோல, பெற்றோரும் குழந்தைகள் சேட்டை செய்து படம்பிடித்தால் கண்டித்து நிறுத்த வேண்டுமே தவிர கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தினர். பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள். எனவே, அவர்கள் முன்பு இது போன்று நடந்து கொள்ள கூடாது. முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!

Follow Us