AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!

Gem Granites Veeramani Case : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் மனுவை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Sep 2026 16:06 PM IST

தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பூதாகாரம் ஆகியுள்ள இந்த வழக்கில் மேலும் 3 சிறுமிகள் ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் அதிகாரிகளான சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி மீது 3 சிறுமிகள் பாலியல் புகார்

இதன் மூலம், ஜெம் வீரமணி மீது 15 சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சம் இன்றி துணிச்சலாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கடந்த 2025- ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை, வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லை என்ற காரணத்தால் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க: திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

சிறுமிகளை வன்கொடுமை செய்யும் வீரமணி வீடியோ

ஆனால், திடீரென இந்த வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வீரமணி, சாந்தி உள்ளிட்டோரின் செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதில், சிறுமிகளை, ஜெம் வீரமணி வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது. டிஜிட்டல் ஆவணங்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி கைமாற்றம்

இதனிடையே, கடந்த ஆண்டு இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி வரை கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பெண் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் டார்ச்சர்.. கூடுதல் பணிச்சுமை.. ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர்.. நெல்லை காவல் ஆணையர் நடவடிக்கை!

Follow Us