என்னை தொடாதீர்கள்.. மீறி தொட்டால்… முதல்வர் விஜய் கூறிய அந்த வார்த்தை!
chief minister joseph vijay : என்னை தொடாதீர்கள்.. என்னுடன் இருப்பவர்களை தொடாதீர்கள்.. மீறி தொட்டால் ஏன்டா தொட்டோம் என்று வருத்தப்படுவீர்கள் என்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அவர்களுடன் மறைந்து, மறைந்து வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இந்த விஜயை தொடாதீர்கள்… விஜயுடன் இருக்கும் இந்த மக்களை தொடாதீர்கள்… அப்புறம் ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம்.. ஏன்டா இந்த விஜய் கூட இருக்க மக்களை தோட்டோம்.. என்று காலத்துக்கும் புலம்புவீர்கள்… தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் நான் பேசியது ஞாபகம் உள்ளதா… அப்படி நான் பேசியது மறந்து விட்டால் மீண்டும் அதனை கேட்டுப் பாருங்கள்… என்னடா 50 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள ஊழல் விவகாரங்களை இந்த விஜய் சட்டப்பேரவையில் பேசுகிறாரே. இவையெல்லாம் தற்போது 50 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு தெரியாதே. தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் மிஸ்டர் கிளீன்… மிஸ்டர் க்ளீன் என்று பேசி வருகிறோம்.
34 ஆண்டுகளாக அனைத்தையும் பார்த்துவிட்டேன்
இந்த விஜய் என்னவென்றால் பழைய கதைகளை எடுத்து பேசுகிறாரே என்று அசிங்கமாகவும், அவதூறாவும் பேசி வருகின்றனர். திக் ஸ்கின் என்று கூறுவார்கள். அதற்கு உலகத்தில் உள்ள ஒரே எடுத்துக்காட்டு நான் மட்டுமே. 34 ஆண்டுகளாக அனைத்தையும் பார்த்துவிட்டு அரசியலுக்குள் வந்துள்ளேன். இதனால் எனக்கு எதுவும் புதிதல்ல. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் எனக்கு இது பத்தாது… மேலும் வேண்டுமென்று எண்ணுகிறேன். அதனால் ஸ்டாலின் சாருக்கும், இந்த திமுகவுக்கும் சொல்லிக் கொள்கிறேன். ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். வரும் காலங்களில் தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்ற முடியாது. ஏமாற்ற விடவும் போறது கிடையாது.
மேலும் படிக்க: ஸ்டாலின் சார் வாயத் திறங்க சார்.. ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்.. எதை கூறுகிறார்!
எனது கேள்வி ஸ்டாலின் சாருக்கு எதிராக மட்டுமே
சர்க்காரியா கமிஷனில் அமலாக்கத்துறை தெரிவித்த கருத்தை நாங்கள் ஒரு நாளும் செய்ய மாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தினர் அரசியலுக்கு குழந்தை என்று கூறுகின்றனர். நாங்கள் குழந்தைதான் தமிழக மக்களின் குழந்தை. ஆனால், சிலர் பவள விழா கட்சியுடன் பண்ணையார் வீட்டு குழந்தையாக இஷ்டத்துக்கு உளறிக்கொண்டு வருகின்றனர். இதனால் தான் கூறுகிறேன் திமுகவும், திமுகவின் தலைமையும்தான் நமக்கு போட்டியே. நமது கேள்வி எப்போதும் ஸ்டாலின் சாருக்கு மட்டும்தான்.
குறுக்கு வழியில் தவெக ஆட்சியை கவிழ்க்க திட்டம்
முதல்வர் என்றால் மக்களின் முதலாளிகள் கிடையாது. நீங்களும், உங்களது குடும்பத்தினரும் பேசுவதை பார்த்தால் தமிழகத்துக்கு நீங்கள்தான் முதலாளி போல பேசி வருகிறீர்கள். தேர்தலுக்கு முன்னதாக நீங்கள் போட்ட கணக்குகள் எதுவும் தற்போது பலிக்கவில்லை. தற்போது, குறுக்கு வழியில் சென்று தவெக ஆட்சியை கலைத்து விடலாம் என்று கணக்கு போட்டு உள்ளீர்கள். இந்த கணக்கெல்லாம் ஒண்ணுத்துக்கும் உதவாத மன கணக்காகும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி… முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி பேச்சு!