ஸ்டாலின் சார் வாயை திறங்க சார்.. ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்.. எதை கூறுகிறார்!
CM Joseph Vijay About Gem Veeramani: தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி வழக்கில் ஸ்டாலின் சார் வாயை திறந்து பேச வேண்டும் என்று முதல் வர் ஜோசப் விஜய் ஆக்ரோசமாக பேசினார் .
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை பயணம் இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 25-ஆம் தேதி) நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது: எனது மனதில் இருக்கும் பெரிய வேதனையான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திமுகவுக்கு நமது மீது எந்த குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஆபத்தான ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. எனது பெற்ற தாயை அவர்கள் தவறாக பேசிய போது, நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், தமிழகத்தில் வாழும் எனது அம்மா, அக்காள், தங்கைகள் ஆகியோர் குறித்து அவர்கள் அசிங்கமாக பேசும்போது திமுக தலைமையும், திமுக குடும்பத்தினரும் இது போன்றே பேசி வருகின்றனர். இதனை ஸ்டாலின் சாரும், அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் ரசித்து வருகின்றனர்.
ஸ்டாலின் சார் வாயை திறந்து பேசுங்க சார். . .
இதனை பொறுத்துக் கொள்ள முடியாது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் நடைபெறும் ஒரு கொடுமையான விஷயத்தை பேசக்கூடாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் சிறுமிகளை பல ஆண்டுகளாக ஒரு சீரழித்து வந்துள்ளார். அந்த வழக்கு கடந்த திமுக ஆட்சியில் வெளிவந்தும் அந்த வழக்கை மூடி மறைத்துள்ளனர். தமிழகமே கேள்வி கேட்கிறது.. ஸ்டாலின் சார் வாயை திறங்க சார்.. ஸ்டாலின் சார் வாயை திறந்த சார்… உங்களோடு சேர்ந்து மற்றும் பலரும் வாயை திறக்காமல் உள்ளனர். இந்த கொடூரமான சம்பவத்தில் கூடவா நீங்கள் கூட்டணி அமைத்துள்ளீர்கள்.
மேலும் படிக்க: என்னை தொடாதீர்கள்.. மீறி தொட்டால்… முதல்வர் விஜய் கூறிய அந்த வார்த்தை!
ஸ்டாலின் சார் என்ன அரசியல் செய்து வருகின்றார்
பெண்கள் பாதுகாப்புக்கே பிறந்தது போல திமுகவும், மற்றும் பலரும் பேசி வருகின்றனர். இவ்வளவு சிறுமிகளை சீரழித்த நபரை தூக்கி சிறையில் வைத்துள்ளோம். அவரைப் பற்றியும், அவருடன் தொடர்புடைய நபர்கள் பற்றியும் தற்போது வரை வாய் திறக்கவில்லை. பல ஆண்டுகளாக மூடி மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை விஜய் வந்து தோண்டி எடுத்து அவரை உள்ளே தூக்கி வைத்து விட்டார் என்று அதிர்ச்சியில் வாயை திறக்காமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
தீய சக்தி திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் பாடம் புகட்ட வேண்டும்
இந்த விவகாரம் தொடர்பாக பேச முடியவில்லை எனில் என்ன அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, இந்த இடைத்தேர்தலில் தீய சக்திக்கும், மற்றும் பலருக்கும் சரியான பாடம் புகட்டி ஆக வேண்டும். உங்கள் சின்னம் விசில் சின்னம்.. உங்கள் ஓட்டு விசிலுக்கு.. நமது வெற்றி சின்னம் விசில் சின்னம்.. மறுபடியும் கேட்கிறேன் விசில் சின்னத்துக்கு தானே வாக்களிப்பீர்கள். நிஜமா… சத்தியமா… சத்தமா… என்று பேசி தனது உரையை முடித்தார்.
மேலும் படிக்க: எம்ஜிஆர், ஜெயலலிதா போல எனக்கும் திமுக தான் எதிரி… முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி பேச்சு!