AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

Dindigul Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மது போதையில் பெற்ற தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு அந்த பழியை தனது மனைவி மீது போட்ட பாசக்கார மகனை வடமதுரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
ஊமைச்சாமி, முத்தையா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Sep 2026 14:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் உள்ள பி. கோசவப்பட்டி அருகே உள்ள சிக்குபோலகவுண்டன்பட்டி தோட்டத்து பகுதியில் வசித்து வந்தவர் ஊமைச்சாமி என்ற பெருமாள் ( 60 வயது). விவசாயியான இவருக்கு முத்தையா ( 30 வயது) என்ற மகன் உள்ளார். இவர், ஏசி மெக்கானிக் தொழில் பார்த்து வருகிறார். இதனிடையே, இவருக்கும் நந்தினி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், முத்தையாவுக்கும் அவரது தந்தை ஊமைச்சாமிக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நந்தினி மீது அவரது கணவர் முத்தையா கோபப்பட்டதாக தெரிகிறது. இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்து தாக்குதல்

இந்த நிலையில், நந்தினி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினியை பார்க்க சென்ற அவரது கணவர் முத்தையா சமாதானம் பேசி மீண்டும் குடும்பம் நடத்துவதற்காக தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் மது போதையில் வீட்டுக்கு வந்த முத்தையா, தனது மனைவி நந்தினியுடன் மீண்டும் தகராறில் ஏற்பட்டு தாக்கி உள்ளார்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

தந்தையை கொன்று மனைவி மீது பழி

இதனால், மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இதை பார்த்த ஊமைச்சாமி தனது மகனின் செயலை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த முத்தையா அங்கு கடந்த கட்டையால் ஊமைச்சாமியை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

பாசக்கார மகனை கைது செய்த போலீசார்

இந்த நிலையில், தனது தந்தை ஊமைச்சாமியை, மனைவி நந்தினி கட்டையால் அடித்து கொலை செய்ததாக முத்தையா நாடகமாகியுள்ளார். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மது போதையில் தந்தையை, மகன் அடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us