AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் பேசிய வார்த்தையால் சட்ட சிக்கல்? இதனை தவிர்த்திருக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கூறுவதென்ன!

CM Vijay Remarks Gem Veeramani Case : மதுராந்தகத்தில் ஜெம் வீரமணி வழக்கு குறித்து முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசி இருப்பது சட்ட சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் .

முதல்வர் விஜய் பேசிய வார்த்தையால் சட்ட சிக்கல்? இதனை தவிர்த்திருக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கூறுவதென்ன!
முதல்வர் ஜோசப் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Sep 2026 21:14 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டி முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, தமிழகத்தில், சிறுமிகளையும், இளம் பெண்களையும் பல ஆண்டுகளாக ஒருவர் சீரழித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை மூடி மறைத்துள்ளனர். இதற்கு பின்னால் திமுகவில் அப்படி என்ன டீலிங் நடந்தது. இத்தனை ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கை தமிழக வெற்றிக் கழக அரசு தோண்டி எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் இப்போது வாய் திறந்து பேசுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களும் இந்த விவகாரத்தில் வாயை மூடி உள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கில் திராவிட கட்சிகள் பேசாதது ஏன்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு குறித்து பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்தனை ஆண்டு காலம் பேசாமல் எங்கு சென்றிருந்தார்கள். இந்த விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். இரு திராவிட கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் அப்படி என்ன ரகசிய உடன்பாடு உள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதுதான் தற்போது சட்ட சிக்கலை எதிர்நோக்கும் நிலையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தவெகவில் EX அதிமுக அமைச்சர்களுக்கு அங்கீகாரம்… முதல்வர் விஜய் கொடுத்த வெயிட்டான பரிசு.. முழு விவரம்!

ஜெம் வீரமணி பாலியல் புகாரில் எஸ்ஐடி குழு விசாரணை

அதாவது, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பிறர் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில், முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்த வழக்கு குறித்து பேசுவது என்பது சரி அல்ல என்ற கருத்து தவறாக எழுந்து வருகிறது. இதனிடையே, நீதிமன்றமும் ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு மட்டுமே இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.

முதல்வர் பேச்சு சட்ட சிக்கலை ஏற்படுத்தும்

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. ஜெம் வீரமணி தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பகிர கூடாது. செய்திகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேசும் இருப்பது தேவையில்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சட்ட சிக்கலை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

Follow Us