AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெகவில் EX அதிமுக அமைச்சர்களுக்கு அங்கீகாரம்… முதல்வர் விஜய் கொடுத்த வெயிட்டான பரிசு.. முழு விவரம்!

TVK New Posting EX Ministers : தமிழக வெற்றி கழகத்தில் 11 அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது என்ன பொறுப்பு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தவெகவில் EX அதிமுக அமைச்சர்களுக்கு அங்கீகாரம்… முதல்வர் விஜய் கொடுத்த வெயிட்டான பரிசு.. முழு விவரம்!
தவெக தலைவர் ஜோசப் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 25 Sep 2026 19:52 PM IST

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு பொறுப்புகள் வழங்கி தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், தமிழக வெற்றி கழகத்தின் துணை பொது செயலாளர்களா அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 11 பேர்  உள்பட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர்  திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் படிக்க: முதல்வர் விஜய் மாலை அணிவித்த எம்ஜிஆர் சிலை.. இதை கவனித்தீர்களா.. தலையை பிய்க்கும் தவெகவினர்!

  • முன்னாள் அமைச்சர் எம். எஸ். எம். ஆனந்தன்- திருப்பூர் வடக்கு.
  • முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்- கடலூர்.
  • முன்னாள் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் – உடுமலைப்பேட்டை.
  • முன்னாள் அமைச்சர் கே. வி. ராமலிங்கம்- ஈரோடு மேற்கு.
  • முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன்- உளுந்தூர்பேட்டை.
  • முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு- கோவில்பட்டி.
  • முன்னாள் அமைச்சர் கே. டி. பச்சை மால்- கன்னியாகுமரி.
  • முன்னாள் அமைச்சர் வெள்ளமண்டி என். நடராஜன்- திருச்சி கிழக்கு.
  • முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி- முசிறி, திருச்சி.
  • முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்- விருதுநகர்.
  • முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி- ஸ்ரீரங்கம், திருச்சி.
  • டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த்- சென்னை.
  • கே. ஜி. முத்து வெங்கடேஸ்வரன்- திருப்பூர்.
  • தொள்ளமூர் கண்ணன்- விழுப்புரம்.
  • வி. சி. ஆர். குமரன். திருவள்ளூர். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட கழகம் உருவாக்கம்

அத்துடன், மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் எம். எல். ஏ.வுமான சி. மகேந்திரன் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளை மேற்கொள்வார்கள். இவர்களுக்கு கட்சியின் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் முக்கிய பதவியில் முன்னாள் அதிமுகவினர்

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் மற்றும் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில், சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

Follow Us