முதல்வர் விஜய் மாலை அணிவித்த எம்ஜிஆர் சிலை.. இதை கவனித்தீர்களா.. தலையை பிய்க்கும் தவெகவினர்!
CM Vijay Respect MGR Statue : மதுராந்தகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சாலை வலத்தின் போது, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்ஜிஆர்- சிலையின் வலது கை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது .
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக, முதல்வர் ஜோசப் விஜய் ஆத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். முன்னதாக, சாலை வலம் சென்ற ஜோசப் விஜய் அந்த பகுதியில் இருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன. இதில், எம்ஜிஆர் சிலையின் வலது கை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
அதில், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தியுள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் இந்த நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுராந்தகம் தொகுதி முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள், அரசியல் கட்சிகளின் கொடி மற்றும் கொடி கம்பங்கள் ஆகியவை துணிகளால் மறைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: என்னை தொடாதீர்கள்.. மீறி தொட்டால்… முதல்வர் விஜய் கூறிய அந்த வார்த்தை!




எம்ஜிஆர்- சிலையின் மறைக்கப்பட்டிருந்தது ஏன்
அதன்படி, முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம். ஜி. ஆர். சிலையின் வலது கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தை காட்டுவது போன்று இருந்தது. இதன் காரணமாகவே, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி எம். ஜி. ஆர். சிலையின் வலது கை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. முன்னதாக, முதல்வர் விஜய் சாலை வலமாக வாகனத்தில் வந்தபோது, திடீரென எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தவெகவினர் அவசர அவசரமாக எம்ஜிஆர் சிலையை சுத்தம் செய்தனர்.
எம்ஜிஆர் சிலையை சுற்றி போலீசார் திடீர் சோதனை
தொடர்ந்து, போலீசாரும் அந்த எம்ஜிஆர் சிலையை சுற்றிலும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் திடீர் சோதனை செய்தனர். இதனால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், சுற்றி இருந்த பொதுமக்கள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, கட்சி தொடர்புடைய எந்த இலட்சினையும் வெளியே தெரியக்கூடாது என்பது நடைமுறையாகும்.
மேலும் படிக்க: ஸ்டாலின் சார் வாயை திறங்க சார்.. ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்.. எதை கூறுகிறார்!