AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!

Namakkal School Students Faint : நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!
சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 25 Sep 2026 17:52 PM IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை உணவாக சேமியா கிச்சடி வழங்கப்பட்டது. இந்த உணவை மாணவர்கள் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, உணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுக்கத் தொடங்கினர். அத்துடன், அவர்களுக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதனால், பள்ளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக உடல் நல குறைவு ஏற்பட்ட 14 மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை

அங்கு, மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க: ரூ. 25 கோடி தர தயார்? தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார் எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் அருண்ராஜ் பெரும் குற்றச்சாட்டு!

பள்ளியில் பெற்றோர்கள் வாக்குவாதம்

அந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாணவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். அங்கு, அவர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி வளாகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதில், அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு மாதிரி

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேமியா கிச்சடியின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us