AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து – சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் விஜய்

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 9, 2026 நாளை  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறார்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து  – சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்  முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Aug 2026 19:38 PM IST

சென்னை, ஆகஸ்ட் 9 : தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 9, 2026 நாளை  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறார். தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் விஜய்

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், “தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும். தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் கடந்த 1891 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட “மனோன்மணியம்” என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட “தமிழ்த்தாய் வாழ்த்து கடந்த 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதையும் படிக்க : ‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்

இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அணைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிய கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்” முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!

ஆகவே, “தமிழ்த்தாய் வாழ்த்து” தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது. என அன்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us