AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் கடைகளின் நேரம் மாறுகிறது? தமிழக அரசு கேட்ட அதிரடி ஆய்வறிக்கை.. விரைவில் அறிவிப்பு!

Ration Shops Operating Time : சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கூட்டுறவுத்துறைக்கு தமிழக அரசு விரிவாக ஆய்வறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் ரேஷன் கடை நேரம் மாற்றப்படலாம்.

ரேஷன் கடைகளின் நேரம் மாறுகிறது? தமிழக அரசு கேட்ட அதிரடி ஆய்வறிக்கை.. விரைவில் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Aug 2026 15:07 PM IST

சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கடைகளின் வேலை நேரம் மாற்றப்பட இருப்பதாகவும், இது தொடர்பாக கூட்டுறவுத்துறை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவுத்துறை கூறுகையில், தமிழகத்தில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலையில் வேலை நேரம் 8:30 மணி முதல் மதியம் 2: 30 மணி வரையும், பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், இதில், மதிய இடைப்பட்ட நேரமாக 2.5 மணி நேரம் உள்பட சுமார் 2 மணி நேரம் ஆகுவதால், பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கும், மனசோர்வுக்கும் ஆளாகின்றனர்.

வாணிப கழக குடோனுக்கு வாரவிடுமுறை

மேலும், நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு வார விடுமுறை நாளாகும். ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு மட்டும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் எனவும் இருந்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்களை விடுமுறை நாளாக குடோன் பணியாளர்களோ அல்லது ரேஷன் கடை பணியாளர்களோ பயன்படுத்த முடியாத நாளாக உள்ளது.

மேலும் படிக்க: நெல் கொள்முதலில் அலட்சியம் காட்டும் அரசு, வீணாகும் நெல் மூட்டைகள் – டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம்

சென்னை- காஞ்சிபுரத்தில் ரேஷன் கடை நேரம்

இதன் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் மாற்றி தருமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாரத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் வேலை நேரமாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை வார விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் என்று தங்களது கோரிக்கையாக வலியுறுத்தி உள்ளனர்.

கூட்டுறவு பதிவு துறைக்கு அரசு உத்தரவு

இந்த கோரிக்கைகள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு குறிப்புகள் அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் படி, ரேசன் கடை செயல்படும் நேரம் மற்றும் வார விடுமுறை நாட்கள் ஆகியவை மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இதற்கான அறிவிப்பு அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை தொடரும் மழை.. உயரும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட் என்ன?

Follow Us