AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின் கோபுரம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்.. சோக சம்பவம்!

Woman Cried Over Cutting Trees | கள்ளக்குரிச்சியில் தான் ஆசை ஆசையாக தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்த மரங்களை மின் கோபுரம் அமைப்பதற்காக அதிகாரிகள் வெட்டிய நிலையில், அந்த மரங்களை வளர்த்து வந்த பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

மின் கோபுரம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்.. சோக சம்பவம்!
மரங்களுக்காக அழுத பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Aug 2026 07:48 AM IST

கள்ளக்குரிச்சி, ஆகஸ்ட் 10 : கள்ளக்குரிச்சியில் மின் கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அந்த மரங்களை வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை கண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மரங்கள் வெட்டப்படுவதை கண்டு பெண் அழுத சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மின் கோபுரம் அமைக்க வெட்டப்பட்ட 89 மரங்கள்

கள்ளக்குரிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மின் கோபுரம் அமைக்க அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்கள் வெப்பட்டட்டுள்ளன. இந்த நிலையில், லோகநாதன் என்பவரின் மனைவி செல்வி என்ற 58 வயது பெண் 12 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பெரிய மரங்களாக வளர்த்துள்ளார்.

இதையும் படிங்க : முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து – சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் விஜய்

இந்த நிலையில் தான், அவர் ஆசை ஆசையாக வளர்த்த மரத்தை மின் கோபுரம் அமைப்பதற்காக அதிகாரிகள் வெட்டியுள்ளனர். ஆரம்பத்தில் தங்களது நிலத்தில் மின் கோபுரத்தை அமைக்க கூடாது என்றும், பல ஆண்டுகளாக தாங்கள் ஆசை ஆசையாக மரங்களை வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால், அந்த நிலத்தில் மின் கோபுரம் அமைப்பது குறித்து உறுதியாக இருந்த அதிகாரிகள் மரங்களுக்கு இழப்பீடாக ரூ.97,000 வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

மரங்களுக்காகன்  கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்

அதிகாரிகள் மின் கோபுரம் அமைப்பதற்காக செல்வி தோட்டத்தில் இருந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். இந்த நிலையில், அதனை கண்டு மனம் பொறுத்துக்கொள்ள முடியாத செல்வி, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மரங்களுக்காக செல்வி கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை பெறும் சோகத்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : முதியவரை கொன்ற புலி… டிரோன் உதவியுடன் தீவிரமாக தேடும் வனத்துறை

மரங்களை பார்த்து செல்வி கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி சோகத்தை வருகிறது.

Follow Us