AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI 1st ODI Toss Update: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 27 Sep 2026 14:39 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியானது திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாகவும், ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்துகின்றனர். நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்தத் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ALSO READ: சுப்மன் கில்லின் காயத்தால் இந்திய அணியில் மாற்றம்? யாருக்கு வாய்ப்பு?

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையே இதுவரை மொத்தம் 142 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 72 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி 64 போட்டிகளில் இந்தியாவைத் தோற்கடித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. மேலும், 4 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன.

டாஸூக்கு பிறகு சுப்மன் கில் கூறியது என்ன?

நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். பிட்ச் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிகிறது. வானிலை மிகவும் வெப்பமாக இருப்பதால், செயற்கை வெளிச்சத்தின் கீழ் (lights) பேட்டிங் செய்வது சற்று எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன்; அதனால் இலக்கை விரட்டிப் பிடிக்க (chase) முயற்சிக்க உள்ளோம். என்னைப் பொறுத்தவரை, எங்களிடம் ஒரு நல்ல அணி அமைப்பு உள்ளது. நான்கு பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஆல்-ரவுண்டர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் கூறியது என்ன?

டாஸ் முடிவு இப்போது பெரிய விஷயமல்ல. நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியிருப்போம். எங்களுக்கு இது மிகக் குறுகிய கால இடைவெளியில் அமைந்த ஒரு தொடர். நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம்; CPL-லிருந்து இது மாறுபட்ட வடிவம் என்றாலும், எல்லாம் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்; இப்போது இந்தியாவுக்கு வந்து அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதே எங்கள் இலக்கு. நான் எப்போதும் சொல்வது போல, உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு இந்தியாவை விடச் சிறந்த இடம் வேறெதுவும் இருக்க முடியாது. எனவே, இந்தச் சவாலை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ALSO READ: ரோஹித், கோலி, ஜடேஜா வச்ச குறி.. குவிய காத்திருக்கும் சாதனைகள்!

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா

வெஸ்ட் இண்டீஸ்:

ஜான் கேம்ப்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), அமீர் ஜங்கு, ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ்

Follow Us