AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: கபடியில் மேலும் ஒரு தங்கம்.. இந்தியாவிற்கு பெற்று கொடுத்த ஆண்கள் அணி!

Indian Mens Kabaddi Team: மகளிர் அணியைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கபடி அணியும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் ஈரானை 40-37 தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இது கபடியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

Asian Games 2026: கபடியில் மேலும் ஒரு தங்கம்.. இந்தியாவிற்கு பெற்று கொடுத்த ஆண்கள் அணி!
இந்திய ஆண்கள் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 Sep 2026 16:21 PM IST

மகளிர் அணியை (India Womens Kabaddi Team) தொடர்ந்து, இந்திய ஆடவர் கபடி அணியும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) இறுதிப் போட்டியில் ஈரானை 40-37 தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இது கபடியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கமாகும். இந்தப் போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்றது. முதல் பாதியில் ஈரான் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாம் பாதியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்தது. ஒரு கட்டத்தில், இந்திய அணி ஈரானை ஆல் அவுட் செய்யும் நிலைக்குத் தள்ளியது. அதன் பிறகு, இந்திய அணி பின்னடைவை சந்திக்கவே இல்லை.

ALSO READ: 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மராத்தானில் இந்தியாவுக்கு பதக்கம் – சவான் பார்வால் வரலாறு..

முதல் பாதியின் முதல் 20 நிமிடங்களில் ஈரான் 18-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாம் பாதியில் இந்தியா 23-16 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இறுதிப் பாதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், ஈரான் நெருக்கடிக்கு உள்ளானது. இந்தியா இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டது. இந்தப் பாதியில் இந்திய வீரர்களின் டிபெண்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக இந்தியாக்கு இது 4வது தங்கம்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் நான்காவது தங்கப் பதக்கமாகும். முதல் பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணி மற்றும் ஆடவர், மகளிர் கபடி அணிகள் பதக்கங்களை வென்றன.

கபடியில் இந்தியாவின் 9வது தங்கம்:

1990 முதல் 2026 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10 நிகழ்வுகளில், இந்திய ஆண்கள் கபடி அணி 9 முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 2018-ல் மட்டுமே இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டது.

இந்திய மகளிர் அணியும் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. முன்னதாக இன்று அதாவது 2026 செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்துவது போல் தோன்றினாலும், இறுதியில் இந்தியாவே வெற்றி பெற்றது.

ALSO READ: ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?

2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு 28 பதக்கங்கள்

நான்காவது தங்கப் பதக்கத்துடன், இந்தியாவின் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 28-ஐ எட்டியுள்ளது. இந்தத் தங்க வெற்றியின் மூலம், பதக்கப் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. 4 தங்கப் பதக்கங்களுடன், 11 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களும் உள்ளன. கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி மொத்தம் 107 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us