தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் ஆகஸ்ட் 11, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 16, 2026 தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 11 : தமிழகத்தில் ஆகஸ்ட் 11, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 16, 2026 தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை
இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 11, 2026 இன்று முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்? கடலின் அழகை ரசிக்க ஏற்பாடு.. அதிகாரிகள் தீவிர ஆய்வு!




அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12, 13, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 14, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 மற்றும் 16, 2026 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 11, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இனி 2 நாள்கள் வார விடுமுறையா? மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு பொதுநல வழக்கு.. முழு விவரம் உள்ளே!
10 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி ஆகஸ்ட் 11, 2026 இன்று முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.