AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச.. பேரவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்.. நடந்தது என்ன?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக் கூறுவதற்குப் பதிலாக "சாமி அமைச்சர்" என அவர் குறிப்பிட்டதுமே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச.. பேரவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்.. நடந்தது என்ன?
கோபு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Aug 2026 18:35 PM IST

ஆகஸ்ட் 10, 2026: சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எனக் கூறுவதற்குப் பதிலாக “சாமி அமைச்சர்” எனக் கூறியவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

பட்ஜெட் மீதான விவாதம்:

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவர் அணிந்திருக்கக்கூடிய உடைகள் கூட முதலில் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து, அவர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டசபையிலும் சிரிக்காமல் இறுக்கமாக இருப்பதாகவும் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று சட்டசபையில் அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் என் ஆனந்த் பேச முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்:

சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “முன்னாள் முதலமைச்சர் கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, செய்தித்தாளைப் பார்த்து காலையிலேயே தொலைபேசியில் அழைப்பார்கள். ஐந்து ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்கள் அப்படி இல்லை. மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: கடலூர்- புதுச்சேரி எல்லையில் ரத்தக்களம்.. நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்!

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும் முதலமைச்சர் தொடர்புகொண்டு பேசுகிறார். பிரச்சினையை சரி செய்துவிட்டார்களா என்று போன் செய்து கேட்கிறார். உங்களுக்கு ஐந்து வருடம்தான் டென்ஷன். ஆனால், எங்களுக்கு தினசரி டென்ஷன்தான்” எனக் குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த உரையாடலை முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்துக் கொண்டிருந்தார்.

பேரவையில் குலுங்கி குலுங்கி சிரிந்த முதல்வர் விஜய்:


அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாகவும் கூறினார்.

இதற்குப் பதிலளித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசியிருந்தார். அப்போது அவர், “எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடம் இல்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர். கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்துசென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலைக்கு எண்டு கார்டு? அடுத்த CM தனுஷா, விஜய்யா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் போட்ட குண்டு!

தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என ‘சாமி அமைச்சர்’ பார்த்தாலே தெரிகிறது” எனக் குறிப்பிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக் கூறுவதற்குப் பதிலாக “சாமி அமைச்சர்” என அவர் குறிப்பிட்டதுமே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow Us