AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திடீரென மாறிய வானிலை.. தமிழகத்தில் பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

வட கடலோரத் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னையில் இன்றும் நாளையும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கான விரிவான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.

திடீரென மாறிய வானிலை.. தமிழகத்தில் பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Aug 2026 06:26 AM IST

Tamilnadu Weather Today: தமிழ்நாட்டில் இன்று முதல் ஆக.15ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. அதோடு, சென்னையில் இன்றும், நாளையும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : நாட்டையே அதிரவைத்த ‘மணி மியூல்’ சைபர் மோசடி.. தமிழகம் முழுவதும் 800 பேர் கைது!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (ஆக.10, 2026) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

தொடர்ந்து, நாளை (ஆக.11 2026) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-08-2026 மற்றும் 13-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோ தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனைத்தொடர்ந்து, ஆக.14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

ஆக.10 முதல் 13ம் தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்குமா திமுக?.. பாஜகவிற்கு மறைமுக ஆதரவா?.. அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us