AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி 2 நாள்கள் வார விடுமுறையா? மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு பொதுநல வழக்கு.. முழு விவரம் உள்ளே!

2 Day Weekly Holiday :தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வாரத்தில் இரு நாள்கள் கட்டாய விடுப்பு வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி 2 நாள்கள் வார விடுமுறையா? மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு பொதுநல வழக்கு.. முழு விவரம் உள்ளே!
வாரத்தில் 2 நாள்கள் கட்டாய விடுப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Aug 2026 19:56 PM IST

தமிழகத்தில் தொழிலாளர்கள் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாளை 2- நாட்களாக உயர்த்தி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 10- ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மாறிவரும் நவீன வாழ்வியலுக்கு ஏற்றவாறு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஊழியர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதற்காக வாரத்தில் 2 நாட்கள் கட்டாய ஓய்வு என்பது அத்தியாவசியமாக உள்ளது.

வாரத்தில் 2 நாள்கள் கட்டாய விடுப்பு தேவை

எனவே, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர் சேவைகள் தேவைப்படும் துறைகளில் மட்டும் பொதுமக்கள் பணிகள் ஏதேனும் பாதிக்கப்படாத வகையில் ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி இந்த 2 நாட்கள் விடுமுறையை செயல்படுத்தலாம் என்று அந்த பொதுநல வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: விசில் அடித்ததால் சர்ச்சை.. நெல்லை மாமன்ற கவுன்சிலர் சஸ்பெண்ட்.. மேயர் அதிரடி உத்தரவு!

ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் தற்போதைய தொழிலாளர்கள் சட்டத்தின் படி வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், 2 நாட்கள் விடுப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊழியர்கள்

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாறிவரும் கால சூழ்நிலை மற்றும் வாழ்வியல்முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து அலுவலகம் சென்று வருவதிலும் கடும் அதிருப்தி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

6 நாள்கள் அலுவலக வேலை- 1  நாள் ஓய்வு

இவ்வளவு அழுத்தத்துக்கு மத்தியில் வாரத்தில் 6 நாட்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பதும் ஒரு நாள் மட்டும் விடுமுறையில் வீட்டில் இருப்பதும் போதாத நிலை ஏற்பட்டதாகவும், இதற்கு கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கி 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கூகுள் பே ஸ்கேம்… கோவையில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன பண மோசடி… மர்ம நபர் கைவரிசை!

Follow Us