திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. தரிசன நேரத்தில் மீண்டும் மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க!
Thiruchendur Murugan Temple Darshan Time : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய தரிசன நேர முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய தரிசன நேரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த மாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி விளங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினந்தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் தரிசனம் செய்வதற்கான நேர கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதில், பக்தர்கள் மாலை 6:30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
புதிய தரிசன நேர அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு
விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாதாரண நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கோவில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட இந்த திடீர் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவிலில் முன்பு இருந்தது போல சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: புதுப்பொலிவுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரம்!




மீண்டும் பழைய தரிசன நேரம் அறிவிப்பு
அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்பு இருந்தது போன்று தரிசன நேரம் மாற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில்,
- தினந்தோறும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
- வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- விசேஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
என்று கோவில் நிர்வாகம் திறப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கேட் மூலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. பொது தரிசனம் மற்றும கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆடி அமாவாசை நாளில் வீட்டில் இதை செய்யுங்க; இந்த விஷயங்களை மட்டும் தவிர்த்திடுங்க!