AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu weather : தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

Tamil Nadu weather today : தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது . இதனால் ஆகஸ்ட் 20, 2026 இன்று 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu weather :  தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2026 16:16 PM IST

சென்னை, ஆகஸ்ட் 20 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 20, 2026 இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தமிழக கடலோர பகுதியில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது. அதனால் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கமனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது . இதனால் ஆகஸ்ட் 20, 2026 இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “கடன் வாங்கி MLAக்களுக்கு காரா?.. 190 MLAக்களிடம் சொந்த கார் இருக்கு!”.. சீமான் கடும் எதிர்ப்பு!!

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21, 2026 நாளை தமிழ்நாட்டில் ஓரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 22, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

வெப்பநிலை குறித்த தகவல்

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 20, 2026 முதல் ஆகஸ்ட் 24, 2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், உள் தமிழகத்தில் சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 20, 2026 முதல் ஆகஸ்ட் 24, 2026 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow Us