AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் பொருள்கள் வாங்க கார்டு தேவையில்லை… ஏன் தெரியுமா? அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட அறிவிப்பு!

Ration Supplies Purchased Without Ration Card : தமிழகத்தில் ரேசன் கார்டுகள் இல்லாமல் கடைகளில் ரேசன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். ஆனால், இவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

ரேஷன் பொருள்கள் வாங்க கார்டு தேவையில்லை… ஏன் தெரியுமா? அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட அறிவிப்பு!
அமைச்சர் வெங்கட்ரமணன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 Aug 2026 21:14 PM IST

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 20- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசுகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், தமிழக முழுவதும் சுமார் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,495 ரேஷன் கடைகளும், இதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது, ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு குறிப்பிட்ட கடைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பது இல்லை. எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். சில பொதுமக்கள் ரேஷன் கடை வரை சென்று விட்டு ரேஷன் கார்டை மறந்து வைத்துவிட்டேன் கூறி மீண்டும் வீட்டுக்கு சென்று எடுத்து வருகின்றனர்.

ரேசன் கார்டு இல்லாமல் பொருள்கள் வாங்கலாம்

இதனால், சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் கார்டு கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அவை இல்லாமலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக, ரேஷன் கார்டின் சாஃப்ட் காப்பி அல்லது ரேஷன் அட்டையின் எண் இருந்தால் கூட போதுமானதாகும். வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் வாடகை வீடுகளை மாற்றி செல்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

15 சேமிப்பு கிடங்குகள்- தானியங்கி கண்காணிப்பு அமைப்பு

இருந்தாலும், எந்த ரேசன் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதி தற்போது வரை பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் உள்ளது. எனவே, இந்த அறிவிப்பை சட்டப்பேரவையின் வாயிலாக அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் 31 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் தானியங்கி இருப்பு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.

புதிதாக 150 ரேசன் கடைகளஅ அமைக்கப்பட உள்ளது

பொது மக்களின் வசதிக்காக 150 ரேஷன் கடைகள் பிரித்து அமைக்கப்பட உள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக முக அங்கீகார வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் ரூ. 59 லட்சத்தில் 150 ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்கு ஆய்வு காண கைப்பேசி செயலை உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெங்கடா ரமணன் அறிவித்தார்.

மேலும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

Follow Us