AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SL vs IND 2வது டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்? வெளியான தகவல்

SL vs IND 2nd Test: முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SL vs IND 2வது டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்? வெளியான தகவல்
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2026 21:40 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா – இலங்கை அணிகள் மோதும் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்?

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் டீமாக சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே டீமை தக்கவைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதல் போட்டியில் சொதப்பினாலும், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அதே நேரம், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது.

இதையும் படிக்க : IND vs SL: இலங்கை வீரருடன் ஜெய்ஸ்வால் வார்த்தை போர்! இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா?

பந்துவீச்சை பொறுத்தவரை, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் 2 இன்னிங்க்ஸிலும் சேர்த்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியதால் அவர் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் போட்டி டிராவில் முடிந்தாலும் இந்தியா தொடரை வென்றுவிடும் என்பதால், அதே அணியைத் தக்கவைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அணியில் மாற்றம் ஏதுமில்லை என்றால், நான்கு முக்கிய வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காது.

குறிப்பாக சர்பராஸ் கான், ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அகிப் நபி, குர்னூர் பிரார் ஆகியோருக்கு இந்த போட்டியிலும் இடம் இடைக்காது என கூறப்படுகிறது. அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவர்கள் பிளேயிங் லவெலனில் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IND vs SL: வெற்றியுடன் தொடங்கிய சுப்மன் படை.. இந்திய அணி படைத்த 3 முக்கிய சாதனைகள்!

முதல் டெஸ்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் மற்றும் அனுபவமிக்க ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் சிறப்பான பந்துவீச்சால் எதிரணியை நிலைகுலைய செய்தனர்.

இந்தியாவின் பிளேயிங் லெவன்

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us