AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC 2027: இலங்கைக்கு எதிரான வெற்றி.. புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முன்னேறியதா?

WTC 2025-27 Points Table: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இது அவர்களின் 5வது வெற்றியாகும். இதன்மூலம், இந்திய அணியின் புள்ளிகள் 52-லிருந்து 64-ஆக உயர்ந்துள்ளன. வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் கிடைக்கும். இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்தியாவின் சதவிகிதம் 48.15-லிருந்து 53.33-ஆக அதிகரித்துள்ளது.

WTC 2027: இலங்கைக்கு எதிரான வெற்றி.. புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முன்னேறியதா?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Aug 2026 18:11 PM IST

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship 2027) தொடரின் ஒரு முக்கியமான போட்டியில், இந்திய அணி (Indian Cricket Team) இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது. சுப்மன் கில் மற்றும் அவரது அணியின் செயல்திறன் அடிப்படையிலான புள்ளிகள் அதிகரித்தபோதிலும், இந்திய அணியின் அட்டவணையில் எந்தவொரு நிலையும் மாறாமல் உள்ளது.  அதேநேரத்தில், டெஸ்ட் போட்டியில் தோற்ற இலங்கை அணி, 6வது இடத்திலேயே நீடித்தது. இந்தநிலையில், புள்ளிப் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மானவ் சுதார் அபாரம் – 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

காலி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கைத் தீர்மானித்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான பிட்ச்சில், முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் சிறப்பாக 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும் எடுத்தனர். துருவ் ஜூரல் ஒரு முக்கியமான அரைசதம் (51) அடித்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 193 ரன்கள் எடுத்து, இலங்கை அணி வெற்றிபெற 372 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் 206 ரன்களுக்குச் சரிந்த நிலையில், இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

முன்னேற்றம் கண்ட இந்தியா:

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இது அவர்களின் 5வது வெற்றியாகும். இதன்மூலம், இந்திய அணியின் புள்ளிகள் 52-லிருந்து 64-ஆக உயர்ந்துள்ளன. வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் கிடைக்கும். இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்தியாவின் சதவிகிதம் 48.15-லிருந்து 53.33-ஆக அதிகரித்துள்ளது. சதவிகிதப் புள்ளி எண்ணிக்கை (PCT) 5.18 அதிகரித்துள்ளது. ஆனால், இந்திய அணியின் நிலை மாறாமல் உள்ளது. அதன்படி, இந்திய அணி ஐந்தாவது இடத்திலேயே நீடிக்கிறது.

தொடர்ந்து 6வது இடத்தில் நீடிக்கும் இலங்கை:

இந்தத் தோல்விக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் அணியின் புள்ளிக்கூட்டுத் திறன் (PCT) முன்பு 41.67 ஆக இருந்த நிலையில் இருந்து 33.33 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், இலங்கை அணி 20 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த வெற்றியின் பின்னரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து 5வது இடத்திலேயே நீடிக்கிறது. வங்கதேசம் சமீபத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தங்களது வெற்றி சதவீதத்தை 66.67 ஆக உயர்த்தியது. இதன் காரணமாக, வங்கதேசம் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 72.22 என்ற வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது.

ALSO READ: 2வது டெஸ்டிலேயே 10 விக்கெட்கள்.. வரலாற்று சாதனை படைத்த மானவ் சுதார்!

9 டெஸ்ட் போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்று, 77.78 என்ற வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 75.00 என்ற வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது.

Follow Us