வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Sending Documents Through WhatsApp | வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்புகிறீர்களா. அது மிகவும் சுலபமாக இருந்தாலும், அதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) உள்ளிட்ட ஆவணங்கள் பல்வேறு சேவைகளுக்கு கேட்கப்படுகிறது. இதன் காரணமாக ஹார்டு காப்பியை வைத்திருக்க தேவையில்லை என்றாலும், டிஜிட்டல் காப்பியையாவது வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, கடனுக்கு முயற்சி செய்வது உள்ளிட்டவற்றுக்காக இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப கோரப்படுகிறது. அவ்வாறு, பலரும் தங்களது ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஆவணங்களை அனுப்புவதற்கு பின்னால் சில ஆபத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள்
வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை தொடர்ப்புக்கொண்டு கடன் வேண்டும் என்றால் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்பார்கள். அதனை நம்பி வாடிக்கையாளர்களும் தங்களது ஆவணங்கள் மற்றும் விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு அனுப்புவதில் எந்தவித சிக்கலும் இல்லை. நீங்கள் ஆவணங்களை அனுப்பும் நபர் நம்பகத்தன்மை உடையவராகவும், மிகவும் நேர்மையானவராகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் அனுப்பும் ஆவணம் அந்த நபரின் கிளவுடில் சேகரிக்கப்படும். அது பிற்காலத்தில் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!




ஆவணங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன
நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு ஆவணங்களை அனுப்புகிறீர்கள் என்றால் அதில் எந்த சிக்கல்களும் இருக்காது. இதுவே நீங்கள் ஒரு தனிநபருக்கு ஆவணங்களை அனுப்பும் பட்சத்தில், அந்த ஆவணங்கள் திருடப்பட்டு அது, வேறு எங்கேனும் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தவறான நபர்களின் உங்களின் ஆவணங்கள் சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் உங்களது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி அழைப்புகள் உள்ளிட்டவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?
இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஆவணங்களை நேராக ஒரு நபரின் மொபைல் எண்ணுக்கு அனுப்புவதற்கு பதிலாக, டிஜி லாக்கர் மூலம் வெஃரிபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.