AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?

How To Download Aadhaar Card Through WhatsApp | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பிலேயே ஆதார் கார்டை Download செய்யலாம்.. அட இவ்வளவு ஈசியா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2026 22:49 PM IST

இந்திய பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவ சிகிச்சை பெறுவது வரை என அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்படுகிறது. இந்த சூழலில் எப்போதும் ஆதார் கார்டை கையில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை நீங்கள் ஆதார் கார்டை எடுத்துச் செல்லவில்லை என்றால் கவலை வேண்டாம். வாட்ஸ்அப்பில் (WhatsApp) வெறும் இரண்டு நிமிடங்களில் உங்களால் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில்  ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1.  முதலில் +91-9013151515 என்ற எண்ணை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவு செய்ய வேண்டும்.
  2. எளிதாக அடையாளம் காணக்கூடிய வகையில் அந்த எண்ணை பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
  3. பிறகு வாட்ஸ்அப்பில் அந்த எண்ணின் சாட்டை திறந்து “ஹாய்” அல்லது “நமஸ்தே” என குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
  4.  நீங்கள் தான் உண்மையிலேயே ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்கிறீர்களா என்பதை சோதனை செய்ய உங்களது டிஜி லாக்கர் தகவல்கள் கேட்கப்படும்.
  5. அதன்படி, அதில் கேட்கும் அனைத்து விவரங்களையும் பதிவிடுங்கள்.
  6. அதனுடன் சேர்த்து உங்களுடைய ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
  7. நீங்கள் மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
  8. அதனை உள்ளிடும் பட்சத்தில், உங்களது டிஜி லாக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தோன்றும்.
  9. அந்த பட்டியலில் உங்களது ஆதார் கார்டு இருந்தால் அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  10. பிறகு உங்களது வாட்ஸ்அப்புக்கு தானாகவே ஆதார் பிடிஎஃப் வந்து சேர்ந்துவிடும்.

இதையும் படிங்க : மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு முதலில் உங்களது டிஜி லாக்கரில் நீங்கள் உங்களது ஆதார் கார்டை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us