AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

KVP : முதலீட்டை டபுள் ஆக்கும் கேவிபி திட்டம்.. முழு விவரம் இதோ!

Kisan Vikas Patra Scheme Investment | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசு வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்து உங்களது பணத்தை இரண்டு மடங்காக உயர்த்துங்கள்.

KVP : முதலீட்டை டபுள் ஆக்கும் கேவிபி திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2026 14:47 PM IST

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் திட்டங்களில் முதலீடு செய்வதை விடவும், அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறுவது மட்டுமன்றி, முதலீடு செய்த பணம் பாதுகாப்பாகவும் இருக்கும். இந்த நிலையில், முதலீடு செய்த பணத்தை இரண்டு மடங்காக மாற்றும் ஒரு அசத்தல் திட்டம் ஒன்று உள்ளது. அது என்ன திட்டம், அதில் எவ்வளவு முதலீடு செய்து, எவ்வளவு லாபத்தை பெறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் – முதலீட்டு இரண்டு மடங்கு லாபம்

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP – Kisan Vikas Patra Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும். அதாவது, இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது அப்படியே ரூ.20 லட்சமாக மாறும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.

இதையும் படிங்க : பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் சுமார் 9 ஆண்டுகள், 7 மாதங்கள் ஆகும். இந்த காலம் முழுவதும் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அதன் பனல்களை பெற முடியும்.

இதையும் படிங்க : ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 115 மாதங்களாக உள்ள நிலையில், அது முடிவடையும் வரை பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு முறையாக முதலீடு செய்யும் பட்சத்தில் பணத்தை இரண்டு மடங்காக மாற்ற முடியும். அதாவது, ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் பெறலாம். இதேபோல ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சமாக மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us